கடவுள் யார்?

“கடவுள் யார்?” என்ற வினாவிற்கு சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள் வழி விடை தேடும் நூலின் தமிழாக்கம்.
முதலாளித்துவம்: ஒரு பேய்க் கதை

அருந்ததி ராயின் “Capitalism: A Ghost Story” நூலின் தமிழாக்கம்; முதலாளித்துவத்தின் இந்திய முகத்தை விமர்சிக்கிறது.
மூண்டெழு கனல்

ஆங்கிலக் கவிஞர் ஜான் கீட்ஸின் “The Eve of St. Agnes” கதைக் கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு.
சாக்ரெட்டஸின் இறுதி நாள்கள் (மூலம்: பிளேட்டோவின் உரையாடல்கள்)

சாக்ரட்டீஸின் வழக்கு விசாரணையையும் இறுதி நாள்களையும் விவரிக்கும் பிளேட்டோவின் உரையாடல்களின் தமிழாக்கம்.
புது நெறி காட்டிய புரட்சிக் கவிஞர்

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனைப் புதுநெறி காட்டிய வழிகாட்டியாக ஈரோடு தமிழன்பன் சித்திரிக்கும் நூல்; பேரா. எஸ்.ஏ. சங்கரநாராயணனின் ஆங்கில மொழிபெயர்ப்புடன் (Bharathidasan: The Revolutionary Poet cum Pathfinder).
வெளிர் வானம்

பிறமொழிக் குறுங்கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்புத் தொகுப்பு. சில சொற்களில் பெரிய உலகைக் காட்டும் கவிதைகள்.
தமிழ் யாப்பியல் உயராய்வு

தமிழ் யாப்பியல் குறித்த முதல் முனைவர் பட்ட ஆய்வேடு. செந்தமிழ்க் காவலர் பேராசிரியர் அ. சிதம்பரநாதனார் ஆங்கிலத்தில் எழுதியதை முனைவர் இராம. குருநாதன் தமிழாக்கியுள்ளார்.
உயிர் (மொழிபெயர்ப்புக் கதைகள்)

பெண்ணியத்தின் பல்வேறு பரிமாணங்களைப் பேசும் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளின் தொகுப்பு. வேறுபட்ட பின்னணியும் கதைப்போக்கும் கொண்ட கதைகள்.
தொழில்சார் நடத்தையும் வழக்குரைத்தலும்

சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் கே.வி. கிருஷ்ணசுவாமி ஐயர் சட்டம் பயில்வோருக்காக நிகழ்த்திய தொழில்சார் நடத்தை, வழக்குரைத்தல் பற்றிய புகழ்பெற்ற சொற்பொழிவுகளின் தமிழாக்கம்.
வினா நூல்

நோபல் பரிசு பெற்ற சிலிக் கவிஞர் பாப்லோ நெரூடாவின் “The Book of Questions” கவிதை நூலின் தமிழாக்கம். படிம அழகு மிளிரும் வினாக் கவிதைகளைப் பேராசிரியர் வ. ஜெயதேவன் மொழிபெயர்த்துள்ளார்.